சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் பலத்த காயம் அடைந்தார். உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவு ஹாரிங்டன் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் அங்கிருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த அக்பரது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் காரில் இருந்ததாகவும் விபத்து நிகழ்ந்த உடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் காரில் இருந்த அவர்கள் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.