சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
திருப்பூரில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மது போதையில் சென்ற நபர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




