புதிய கலரை கண்டுபிடிச்ச ஆராய்ச்சியாளர்கள்..!
கலிபோர்னியா யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் யாரும் பார்த்திராத ஒரு கலரை கண்டுபிடித்ததாக சொல்கின்றனர். அந்த கலருக்கு, ‘Olo’ என்றும் பெயரிட்டுள்ளனர்.
கண்களின் விழித்திரையில் (Retina) இருக்கும் வெவ்வேறு செல்கள் லேசருடன் தூண்டப்படும்போது இந்த கலர் தோன்றும் எனக் கூறுகிறார்கள். தற்போது வரை, உலகில் 5 பேர் மட்டுமே இந்த கலரை பார்த்துள்ளனர். அவர்கள், இதை ‘நீல-பச்சை’ காம்பினேஷன் என்கின்றனர்.





