நடிகை குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஹேக்!
தனது ‘X’ அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது ஐடியை மீட்க யாரேனும் உதவி செய்யுமாறு ‘Please Help Me’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஏற்கனவே பலமுறை ஹேக் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.





