பகவத் கீதைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: PM பெருமிதம்
பகவத் கீதைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதற்கு PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது நமது பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.
பகவத் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன எனவும் மோடி கூறியுள்ளார்.





