புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் விடுங்க
மகாவீர் ஜெயந்தியை போல், புனித வெள்ளிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததில் ஏமாற்றம் அளிக்கிறது.
உயிரை குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம் எனக் கேள்வி எழுப்பிய அவர், கிறிஸ்தவர்களின் கோரிக்கைக்கு அரசு மதிப்பளிக்காதது, அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




