சென்னையில் பிரபல ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு..!
சென்னை திருவல்லிக்கணியில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 25 பேருக்கு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் உணவகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் பிரியாணி கடையில் கடந்த 30ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வருகையின் போது கடை மூடப்பட்டு இருந்தது.
இதையடுத்து உணவக உரிமையாளருக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அதிகாரிகளின் செல்போன் அழைப்பை உணவக உரிமையாளர் எடுக்காத நிலையில், உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதேபோல் அண்ணா சாலையில் உள்ள மற்றொரு தனியார் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கும் உடல் நலப் பிரச்சனைகள் எழுந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்தும் உணவு பாதுகாப்புத்துறையினரும் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




