--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!

3

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன ழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் படிப்படியாக 2 – 3° செல்சியஸ் குறையக்கூடும்.

 

உள் தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். வரும் 6ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon