--- --:--:-- --

கடலூரில் ரவுடி மொட்டை விஜய் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை..!

1

கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி விஜயை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

 

விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த ரவுடி மொட்டை விஜயை போலீசார் தேடி வந்தனர்.

 

கடலூர் அடுத்த எம்.புதூர் பகுதியில் விஜய் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விஜய் இரண்டு போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து, விஜயை என்கவுண்ட்டர் செய்து போலீசார் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது.ரவுடி விஜய் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலர்கள் கோபி மற்றும் கணபதி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டை விஜயின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon