தமிழ்நாட்டின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது: சுரேஷ்கோபி
தமிழ்நாட்டில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மலையாள மக்களுக்கு தமிழ்நாடு தாய்க்குலம் என்றார்.
மேலும், இங்கு அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளதாக கூறினார். பாஜக, திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் அக்கட்சியின் அமைச்சர் அரசுக்குப் புகழாரம் சூட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




