சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு
மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




