--- --:--:-- --

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கழிப்பறை..!

10

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கழிப்பறை சொந்த தெருவில் கட்டி மாணவர்களை வைத்து திறந்த நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட சிதலமடைந்த ஒன்றுக்கு உதவாத கழிப்பறைகள் இருந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு செய்தி எதிரொளியின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது. அப்படி இடித்து அகற்றுவதில் அக்கரை காட்டிய அதிகாரிகள் பதிய கழிப்பறை கட்ட எவ்வித நடவடிக்டையும் எடுக்கவில்லை.

 

தொடர்ந்து பலமுறை மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கழிப்பறை கேட்டு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதனால் அவதிப்பட்டு வந்த மாணவர் மாணவர்களுக்கு நலன் சேர்க்கும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த தலைமையில் சுமார் 70 ஆயிரம் செலவு செய்து ஆண் பெண் தனியாக செல்லும் கழிப்பறை ஒன்றை தற்காலிகமாக கட்டி இன்று மாணவ மாணவிகளை திறந்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டார்கள்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon