மொழி பெயர்க்க கேட்டுக்கொண்ட அண்ணாமலை.. தவிர்த்த வானதி..!
கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யாவின் பேச்சை, மொழி பெயர்க்காமல் வானதி சீனிவாசன் தவிர்த்தார். கோவை குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி, பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேஜஸ்வி சூர்யா பேசியபோது முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தகுமார் மொழிபெயர்ப்பு செய்வார் என மேடையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மைக்கை வாங்கிய அண்ணாமலை அதை வானதி சீனிவாசனிடம் கொடுத்து மொழி பெயர்ப்பு செய்ய கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் தேஜஸ்வி சூர்யா பேச்சை கவனித்த அவர், “மொழிபெயர்ப்பு தேவையா” என கட்சியினரை பார்த்து கேட்டார். அதன்பின், தேஜஸ்வி சூர்யாவின் பேச்சை, மொழி பெயர்க்காமல் வானதி சீனிவாசன் தவிர்த்தார்.
இதனைத்தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிய தேஜஸ்வி சூர்யா, “தொண்டர்களுக்கு புரியும்படி மொழி பெயர்க்குமாறு” கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது பேச்சை முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தகுமார் தமிழில் மொழி பெயர்த்தார்.





