--- --:--:-- --

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி..!

2

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சென்றார். இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் வாஷிங்டன் தேசிய நகரில் உள்ள ஆண்ட்ரோ விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

வாஷிங்டன் தேசிய நகரில் தற்பொழுது கடும் பனிப்பொழிவு நிலவும் சூழ்நிலையிலும் பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளியினர் அங்கு திரண்டிருந்தனர். இரண்டு நாட்கள் அமெரிக்காவில் பயணிக்கும் பிரதமர் மோடி அங்கு ட்ரம்பை சந்திக்கிறார்.

 

இந்த சந்திப்பின் பொழுது இரு நாடுகள் இடையேயான நட்புறவு, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி துறை, சட்டவிரோத குடியிருக்கும் இடம் விவகாரங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடுவார்கள் என கூறப்படுகிறது.

 

இதனிடையே இந்த பயணத்தில் எலான்மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்திப்பார் என்றும் அப்பொழுது இந்தியாவின் ஸ்டார் லைன் சேவையை தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon