பெண்ணை தொட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா தமிழகத்தில் பாலியல் சம்பவம் தொடர்ந்து கேவலமான விஷயமாக உள்ளது என்று கூறினார். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





