--- --:--:-- --

கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!

5

புதுச்சேரியில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வாங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து மொழிப்பாட தேர்வு ரத்து செய்யப்பட்டது.

 

புதுச்சேரி பல்கலைக்கழகம் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று மொழிபாடத் தேர்வு தொடங்கியது.

 

ஆனால் வினாத்தாளை வாங்கி படித்த மாணவர்கள் குழப்பமடைந்தனர். முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு வினாத்தாளுக்கு பதிலாக இரண்டாம் ஆண்டு நான்காம் தேர்வு செமஸ்டர் தேர்வு வினாத்தாள்கள் வழங்கி இருந்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அதனையடுத்து மொழிப்பாட தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் தேர்வு அறைகளில் இருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon