படியில் பயணம் செய்வதில் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்..!
சென்னை அடுத்துள்ள குமிடிப்பூண்டியில் படிக்கட்டில் தொங்குவதில் மாணவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேருக்கும் கத்தி வெட்டு விழுந்தது. அரசு பள்ளியில் படித்து வரும் 11 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவனின் அண்ணன் கத்தியால் பதினொன்றாம் வகுப்பு மாணவனை வெட்டியதாகவும் அந்த கத்தியைப் பறித்து திரும்ப வெட்டியதில் அந்த இளைஞன் காயமடைந்ததாக கூறப்படுகிறது.





