--- --:--:-- --

விஷம் கலந்த அரிசியை வீசி புறாக்களை கொன்ற நபர்..!

6

ங்கராபுரம் அருகே விஷம் கலந்த அரிசியை வீசி புறாக்களை கொன்ற மர்மநபர் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்.

 

இவர் தனது சொந்தமான விவசாய நிலம் வீடு கட்டி பண்ணை அமைத்து புறா, கோழிகளை பராமரித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு கிராமத்தில் உள்ள வீடு இருக்கு சென்ற துரைராஜ் திரும்பி வந்து பார்த்த பொழுது பண்ணையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்து கிடந்தன.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த துரைராஜ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய பொழுது அரிசியில் விஷம் கலந்து வயல் பகுதியில் மர்ம நபர் வீசி சென்றது தெரிய வந்தது யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon