--- --:--:-- --

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடக்கம்..!

1

புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு முன்னதாகவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காளைகளின் திமிலை அடக்கும் முனைப்பில் காளையர்கள் களம் கண்டு வருகின்றனர்.

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தனர்.

 

வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள், என போட்டிக்கான ஏற்பாடுகள் விரைவாக முடிந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,110 காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ள நிலையில், 900 வீரர்கள் களம் காண உள்ளனர்.

 

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக நிசான் கார் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட உள்ளது.

 

இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அருகே, எழுத்தாளரும், நடிகருமான வேலராம மூர்த்தியின் வீடு உள்ள நிலையில் அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டதால், அவரது மனைவி அரிவாளை எடுத்து வந்து தடுப்புகளை வெட்டினார். ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon