--- --:--:-- --

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியான விசிக..!

1

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.

 

மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து பானை சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலித் ஒருவரால் தொடங்கப்பட்ட அரசியல்கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று விசிக எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon