ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இன்று ஆலோசனை..!
இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 3 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு முக்கிய நிகழ்வுகள் மற்றும் 2026 தேர்தல் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





