--- --:--:-- --

ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்.. ஆருத்ரா விழா, அன்னதானத்திற்கு ஏற்பாடு.. நன்கொடை தந்து இறையருள் பெற அழைப்பு!

4

திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில், திருக்கல்யாண மஹோற்சவம், ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆருத்ரா அன்னதான குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதான விழா விமர்சையாக நடைபெற உள்ளது.

 

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோயில். ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

 

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுக்ரீஸ்வரர் கோயில், திருப்பூர் அருகில் ஐராவதி (நல்லாறு) நதிக்கு தெற்கிலும், காஞ்சி (நொய்யல்) நதியின் வடக்கிலும் அமைந்துள்ளது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன.

 

இத்தகைய வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஆவுடைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 7ஆம் ஆண்டு திருக்கல்யாண மஹோற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம், ஆருத்ரா அன்னதானக் குழுவினரின் சிறப்பு அன்னதான விழா, ஜனவரி 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

 

முதல் நாள் விழா, வரும் 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, எல்லை தெய்வமான ஸ்ரீமுகுந்தாபுரி அம்மனுக்கு விசேஷ ஹோமம், அபிஷேக அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற உள்ளது.

 

இரண்டாம் நாளான ஜன. 12 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிக்குள், ஸ்ரீசிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஆனந்த நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக திருக்கல்யாண உற்சவ சீர்தட்டு, ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து புறப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்வுக்கு பிறகு, 11 மணியளவில் அன்னதானம் நடைபெற உள்ளது.

 

ஜனவரி 13ஆம் தேதி மூன்றாம் நாளில், அதிகாலை 4 மணிக்கு கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஹோமம், 108 கலச பூஜை, 108 சங்கு பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற உள்ளது. காலை 7.30 மணிக்கு ஸ்ரீசிவககாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து மஹா தீபாராதனை, ஆருத்ரா தரிசனம், சுவாமி திருவீதியுலா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

 

நிறைவாக, ஜனவரி 13ஆம் தேதி காலை 10.00 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது. அன்னதானத்திற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் நிதி உதவியை வழங்கி சிவனின் அருளை பெறும்படி, அன்னதான அறக்கட்டளை குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு 95666 51325, 90034 18888, 90927 81888, 95973 90376 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று ஆருத்ரா அன்னதான அறக்கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon