கையில் இருந்து குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்ற ரத்தம்..பெண் மரணம்..!
சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் தவறான சிகிச்சை எடுத்தால் பெண் இறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வியாசர்பாடியை செய்த ருக்மணி, ஸ்கேன் பிரிவுகளுக்கு செல்லப்பட்ட பொழுது ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் குளுக்கோஸ் ஏற்றும் பொழுது ரத்தம் குளுக்கோஸ் பாட்டிலுக்கு சென்றதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை வீடியோ எடுத்தபொழுது காவலாளிகள் மிரட்டி வீடியோவை நீக்க வைத்ததாகவும் கூறினார். இறுதியாக போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து ருக்மணி உடலை வாங்கி சென்றனர்.





