சிக்கிய போலி மருத்துவர்..!
செங்கல்பட்டு அருகே வீட்டுக்கு சென்று 11 வயது சிறுவனுக்கு ஊசி போட்ட போலி மருத்துவர் போலீசார் கைது செய்தனர். பாலூர் கிராமத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் மூதாட்டியிடம் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்பொழுது சிறுவனுக்கு சளி பிடித்திருப்பதாக மூதாட்டி கூறியுள்ளார். உடனே அந்த நபர் நானும் மருத்துவர் தான் என கூறி சிறுவனை பரிசோதித்து ஊசி போட்டுள்ளார். இதை கவனித்த இளைஞர்கள் சந்தேகப்பட்டு முதியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த போலி மருத்துவர் பெரோஸ்கான் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்டம் மருத்துவ இணை இயக்குனர் மலர்விழி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலி மருத்துவர் பெரோஸ்கான் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





