--- --:--:-- --

அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை..!

3

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ராயப்பேட்டையில் அதிமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தனியார் வணிக வளாகத்தில் யார் அந்த சார் என்ற பதாகையுடன் அதிமுகவினர் பதாகை ஏந்தி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் நூதன போராட்டம் நடத்தினர். வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

ஆனால் சம்பவத்தின் பொழுது ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ சார் என பேசியதாக மாணவி அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் எனவே பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக வலியுறுத்தி வருகிறது.

 

இந்த நிலையில் யார் அந்த சார் என்ற நூதன போராட்டத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே அதிமுகவின் நூதனப் போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு சாமானியனை பாதிக்கும் பிரச்சினைகளில், இந்த பிரச்சனையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியை கேட்டதற்காக அதிமுகவிற்கு பாராட்டு எனவும் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon