கல்யாணத்துக்கு நோ..காதலியின் வீட்டை கொளுத்திய காதலன்..!
திருமணத்திற்கு மறுத்த காதலியின் வீட்டை இளைஞர் தீ வைத்து எரித்த சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பக்ரா மாவட்டம் வித்யார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி ராஜன் தாஸ் இவரும் அண்டை கிராமமான அனல்பூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளும்படி காதலியிடம் ராஜன் கேட்டு திருமணத்திற்கு மறுத்ததால் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ராஜீவ் குறித்து காவலரிடம் புகார் அளித்தனர்.
காதலியின் செயலால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவர் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





