வகுப்பறையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உயிரிழந்த 14 வயது மாணவி..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவரின் 14 வயது மகள் தான் படிக்கும் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிபவர் வசந்தகுமார்.
இவரது 14 வயது மகளான அத்விதா ராணிப்பேட்டை மாவட்டம் சுவேதாணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் பள்ளியிலே மயங்கி விழுந்தார்.
தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்று அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.





