--- --:--:-- --

இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு மக்களே காரணம்..!

5

பேரிடர்களுக்கு இயற்கையை குறை சொல்லி பயனில்லை. நாம்தான் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பேரிடர்களுக்கு இயற்கையை குறை சொல்லி பயனில்லை என்று தெரிவித்தார்.

 

இதற்கு பொதுமக்களாகிய நாம் தான் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உரிமைகளை பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த அரசு தடை விதித்திருந்த போதிலும் டன்கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடப்பதாக நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon