டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்தார். தாளவாடி மலை பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார் – வனஜா தம்பதியினரின் மகள் மௌலிக்கா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மௌனிகாவிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு குறையாததால் கர்நாடக மாநில மைசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதிக்கப்பட்டதிலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி இறந்த சம்பவம், தாளவாடி மலைப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





