யானை தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மை..ரகசிய தகவல்..!
விழுப்புரத்தில் யானை தந்ததால் செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள யானை பொம்மைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் 12 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கலைநயமிக்க நான்கு யானை பொம்மைகளை திருச்சியை சேர்ந்த கும்பல் விற்பனை செய்ய உள்ளதாக பணம் மற்றும் வன உயிரின குற்றம் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள விடுதியில் அந்த கும்பல் தங்கி உள்ளதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து அந்த பொம்மைகளை வாங்கும் வியாபாரிகள் போன்று ஒருவரை ஏற்பாடு செய்த அதிகாரிகள் அதன் மூலம் அந்த கும்பலை கையும் களவுமாக சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து ஆறரை கிலோ எடை கொண்டு யானை தந்ததால் செய்யப்பட்ட நான்கு யானை பொம்மைகள், மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட யானை பொம்மைகள் மூன்று கோடி ரூபாய் மதிப்படையது என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 12 பேரும் ஒட்டன்சத்திரம், அறந்தாங்கி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





