தாயும் குழந்தையும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த பரிதாபம்.. நடந்தது என்ன..?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாங்குப்பத்தை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி துர்கா தேவி கடந்த ஞாயிறு அன்று பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் இயற்கையாக குழந்தையை பிரசவித்த நிலையில் ரத்தப்போக்கு அதிகமாகியுள்ளது. இதனால் திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு அடுத்தடுத்த அனுப்பப்பட்ட துர்கா தேவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை பெற்றுக்கொண்டு கிராமத்திற்கு வந்த உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டி ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆம்பூர் வட்டாட்சிய ரேவதி தலைமையிலான அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
உறவினர்களின் குற்றச்சாட்டு குறித்து மாவட்டம் மருத்துவர் கண்ணகியிடம் கேட்ட போது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் செவிலியரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





