--- --:--:-- --

அகழாய்வில் கிடைத்த தங்கத்தினாலான மணி..!

2

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு பல்லாயிரமாண்டு காலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும் பொருளும் அறிவும் நிறைந்து செயல்பாடு மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

1.28 மீட்டர் காலத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தில் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்க வளையல்கள் உள்ளிட்ட 2400க்கும் மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

Right Menu Icon