பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவிப்பு..!
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பாம்பு, தேள், நாய் மற்றும் பிற விலங்குகள் கடித்து சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது.
மேலும் விஷக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விபரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது.





