பாலம் அமைக்க வேண்டும்..தேங்கிய நீரில் இறங்கி போராட்டம்..!
திருப்பத்தூர் அருகே காமராஜ் நகர் பகுதியில் பாலம் அமைக்க கோரி இடுப்பு அளவு தேங்கிய நீரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஓட்டேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து அங்குள்ள தரைப்பாலத்தில் செல்கிறது.
இதனால் அந்த வழியாக செல்ல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் நீரில் இறங்கி செல்ல வேண்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் பாலம் அமைக்க கோரி இடுப்பளவு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





