கடத்தல்காரர்களை சுட்டு பிடித்து குழந்தைகளை மீட்ட காவல்துறை..!
கர்நாடக மாநிலம் பிலகாவியில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்தி சென்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தொழிலதிபரின் குழந்தைகள் இருவர் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது வீட்டிற்குள் புகுந்த நபர்கள் இருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி தூக்கிக்கொண்டு வெளியேறி சென்றனர். காருக்குள் கடத்தி சென்று தப்பினர். இது குறித்த பெற்றோர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் காரின் பதிவு எண்ணை கொண்டு கடத்தல்காரர்களை பிடித்தனர்.
இருவரும் காயம் அடைந்தனர். குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் எஸ்டேட் பிரச்சனையில் தொழிலதிபரை பழி வாங்கி அவரது குழந்தைகளை கடத்தியது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





