--- --:--:-- --

மது கடைகளை மூட உத்தரவு..ஆட்சியர் அதிரடி..!

8

மருது சகோதரர்களின் 223 வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களின் 223 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் திருப்பத்தூர் மானாமதுரை, திருபுவனம், திருப்பாச்சி, மதக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை நேற்று மாலை 6 மணி முதல் இன்று வரை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon