--- --:--:-- --

4.5 அடி உயரச் சிவலிங்க சிலை கண்டெடுப்பு..!

4

புதுக்கோட்டையில் சுமார் 300 கிலோ எடை கொண்ட நான்கரை அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாராப்பூர் அருகே உள்ள மேல புலவன் கிராமத்தில் சவுக்கு தோட்டத்தில் சிவலிங்கம் சிலை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வருவாய்த்துறையினர் ஜேசிபி எந்திரத்துடன் அந்த பகுதியை தோண்டினர்.

 

ஆறு அடிக்கு கீழ் தோண்டிய பொழுது நான்கு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் தென்பட்டது. சுமார் 300 கிலோ எடை கொண்ட சிவலிங்கத்தை கிரேன் உதவியுடன் தோண்டி எடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். மண்ணிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon