--- --:--:-- --

ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம்..!

4

ராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய புகாரில் தேனி மாவட்டம் சோலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்த நாகமணி – வெங்கடேசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் ஊராட்சி மன்றத்தில் சிறப்பு தணிக்கை நடைபெற்றது.

 

இதில் நாங்கள் 47 லட்சத்து ரூபாய்க்கு உரிய அனுமதியின்றி வளர்ச்சி பணிகளில் செலவு செய்ததும் இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

 

இதையடுத்து அந்த தொகையை அரசுக்கு செலுத்த உத்தரவிட்டும் அவர் திருப்பி செலுத்தாததால் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊராட்சி தலைவரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து தேனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon