பழுதான பள்ளி கட்டடங்களை பயன்படுத்தக் கூடாது!
பள்ளிகளில் பழுதான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
பருவமழை தீவிரமடைவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்திய அவர், பாடவேளையில் மாணவர்கள் வகுப்பில் இருப்பதை உறுதி செய்யவும், பழுதான கட்டங்களில் தடுப்புகள் வைக்கவும், நீர் நிரம்பிய இடம் அருகே மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க, அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




