செம்பரம்பாக்கம் ஏரி..நேரில் பார்வையிட்ட உதயநிதி..!
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளக்கும் செம்பரம்பாக்கம் ஏரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளின் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது? மதகுகள் ஷட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





