--- --:--:-- --

பாதாள சாக்கடையில் பைக் உடன் விழுந்த வாகன ஒட்டி..!

6

திருப்பூரில் மழை நீரில் நிரம்பிய பாதாள சாக்கடையில் உள்ள இருசக்கர வாகன ஓட்டியை பொதுமக்கள் மீட்டனர். திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே பாதாள சாக்கடை அருகே மழை நீரோடு சாக்கடை நீரும் இருந்ததால் பாதாள சாக்கடையின் பகுதி உடைந்து தண்ணீர் வெள்ளம் போல் சாலையில் ஓடுகிறது.

 

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்வதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக தனசேகரன் என்பவர் அந்த வழியே சென்ற பொழுது சாலையில் பாதாள சாக்கடை இருப்பதை அறியாமல் இரு சக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார்.

 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தனசேகரன் மீட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon