ஹரியானா அரசை சாடிய உச்ச நீதிமன்றம்..!
பயிர் கழிவுகள் இருப்பை தடுப்பது தொடர்பான தங்கள் உத்தரவுகளை பின்பற்றாததை ஹரியானா அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஹரியானா மாநிலத்தில் டயர்களை எரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மாநில அரசுகள் எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக ஹரியானாவின் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் யாருக்காக மாநில அரசு செயல்படுகிறது என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பயிர் கழிவுகளை இருப்பதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் தாங்கள் ஏற்கனவே உத்தரவுகளை ஏன் செயல்படுத்தவில்லை என பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கவும் ஹரியானா தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





