ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை திருவான்மியூரில் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் பெண் பயணியிடமிருந்து தங்கச் செயினை பறித்த நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். பூ வியாபாரம் செய்யும் பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர்.
அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடினார். அங்கிருந்த சக பயணிகள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். இந்த திருட்டு சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





