இன்று கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு..!
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பிற்பகல் 2:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் அக்டோபர் மாதம் காவிரி தண்ணீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும். அக்டோபர் மாதம் தரவேண்டிய 20.22 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட தமிழக அரசு கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





