பெரியகுளம் கொடைக்கானல் பாதை அடுக்கத்தில் மண் சரிவு..!
கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 4 மணி நேரமாகப் பெய்து வரும் கனமழையால் அடுக்கம்பகுதியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மண் அரிப்பை தடுப்பதற்காக கட்டப்பட்ட சுற்று சுவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. சாலை குறுக்கே வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் அடுக்கம் வழியாக கொடைக்கானலில் இருந்து தேனி செல்லும் சுற்றுலா பயணிகளும் பெரிய குளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
சாலையில் தேங்கியுள்ள மண் குவியலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினால் மட்டுமே போக்குவரத்து சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.





