ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை..!
90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.காலை 10 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும், பிடிபி 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதே போல ஹரியானாவில் திடீர் திருப்பமாக பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.ஹரியானாவில் பின்னடைவை சந்தித்திருந்த பாஜக தற்போது 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
90 தொகுதிகள் உள்ள ஹரியானாவில் பெறும்பான்மைக்கு 45 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.ஹரியானாவில் முன்னிலை நிலவரத்தில் 50-ஐ நெருங்குகிறது பாஜக. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் 33 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.ஹரியானா தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார்.





