--- --:--:-- --

திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணப்பட்டுவாடா..ரூ.200 மட்டுமே கொடுத்ததால் வந்தவர்கள் புலம்பல்..!

4

மயிலாடுதுறை அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கருணாநிதி சிலையை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக நிர்வாகிகள் குறைந்த அளவிலே பணம் கொடுத்ததாக கூட்டத்திற்கு வந்தவர்கள் புலம்பிய படியே சென்றனர்.

 

மயிலாடுதுறை அருகே மணல்மேடு திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞரின் முன்னாள் முதல்வரின் உருவ வெண்கல சில சிறப்பு விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சரும் கருணாநிதி பேரனும் ஆன உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஆணைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மணல்மேடு மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் திமுகவினர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர்.

 

பின்னர் கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தூக்கம் வழங்கப்பட்டு இருநூறு ரூபாய் கொடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்கள் குறைந்த அளவிலே பணம் கொடுத்ததால் புலம்பியபடி சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon