--- --:--:-- --

திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!

1

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் அனுப்பியது கோயில் நிர்வாகம் சார்பில் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான நிர்வாகம் புகார் அளித்திருந்தது.

 

புகாரின்பேரில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தவறான அல்லது திருத்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தல், அபாயகரமான குற்றங்களை செய்து குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்துதல், குற்ற நோக்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி எதிர் தரப்பினரை ஏமாற்றுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதில், அபாயகரமான குற்றங்களை செய்து குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனையும், குற்ற நோக்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி எதிர் தரப்பினரை ஏமாற்றிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon