டோன்ட் பை ஓலா..பைக் அடிக்கடி பழுதாவதால் ஆதங்கம்..!
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓலா பைக்கிற்கு எதிராக நூதன முறையில் பிரச்சாரம் செய்ய தொடங்கியிருப்பது சமூக வலைதளங்களில் தனி கவனம் பெற்றுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வாங்கிய ஓலா பைக்கில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சேவை மையத்தை அணுகிய பொழுதும் பிரச்சனைகள் சரியாக விளையாவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே யாரும் ஓலா பைக் வாங்க வேண்டாம் என்று பேப்பரில் எழுதி தனது வாகனத்தில் போஸ்டர் ஆக ஓட்டியுள்ளார். அதை புகைப்படமாக எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டோன்ட் பை ஓலா என்று குறிப்பிட்ட அவர் வெளியிட்டுள்ள பதிவில் இணையதளத்தில் தனிக் கவனம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





