--- --:--:-- --

திடீரென எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் சல்மான்கான்..!

6

அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த போவதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று சல்மான்கான் கூறியுள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தப் போவதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை சல்மான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது தொடர்பான மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் தனது பெயரை மோசடி நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon